நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து, தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று கொட்டகலை, போகாவத்தை நகரத்தில் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் பிரதேச மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் பெரும்பாலான இடங்களில் சிறுவர் மற்றும் சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்படும் அவர்கள், பல்வேறு துஷ்பிரயோகங்களிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
குறிப்பாக சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்ட வேண்டும்.
மேலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துகின்ற தரகர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.