சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி கோரி மலையகத்தில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா- பூண்டுலோயா நகரில், அப்பகுதி மக்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளதாவது, “சிறுமி ஹிசாலினியின் பிரேத பரிசோதனை சட்டரீதியாகவும் முறையாகவும் இடம்பெற்று, அவரின் உயிரிழப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
மேலும் மலையகத்தின் எதிர்கால சிறுவர்களின் உயிர் மற்றும் உரிமை பாதுகாப்புக்கு சிறுமி ஹிசாலினியின் மரணம் ஒரு ஒளியை வழங்க வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.