நாட்டின் முன்னேற்றத்திற்கான எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள் தற்போது தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக நாடு பின்பற்றும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளின் முடிவுகளை நாடும் மக்களும் அனுபவித்து வருவதாக அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் எதிர்காலம் இல்லை என்பதை அனைத்து துறைகளும் காட்டுகின்றன என்றும் கடன் காரணமாக பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த வெளிநாட்டு இருப்புக்கள் போதுமானதாக இல்லை, இதன் விளைவாக அரசாங்கம் அதிகபடியான பணத்தை அச்சிடத் தொடங்கியது என்றும் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டினார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடுமையான பொருளாதார தந்திரோபாயம் இல்லை என்பதை அரசாங்கம் காட்டுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.