இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்லும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை நாளை முதல் ஐக்கிய அரபு இராச்சியம் தளர்த்தவுள்ளது.
டெல்டா திரிபு காரணமாக பல்வேறு நாடுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் அண்மையில் நேபாளம், இலங்கை, உகாண்டா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு தடை விதித்திருந்தது.
இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகளுடன், குறித்த நாடுகளில் இருந்து செல்லும் பயணிகள் விமானத்திற்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் பயணிகள் நுழைவு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்கு மேலதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்திய மற்றும் பயணிப்பதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைக்கான ஆவணங்கள் என்பனவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.