தடுப்பூசி பிரசாரத்தின் ஒருபகுதியாக மாணவர்களை குறிவைத்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை சீன அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
இன்று சீனாவில் 71 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை ஜனவரிக்கு பின்னர் பதிவாகிய அதிகூடிய எண்ணிக்கை என அரசாங்கம் கூறியுள்ளது.
இந்நிலையில் மிகவும் வேகமாக பரவும் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராகப் போராட 12 முதல் 17 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் எத்தனை பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது தொடர்பான தெளிவான தரவுகள் வெளியாகவில்லை.
இருப்பினும் இதுவரை 1.6 பில்லியனுக்கும் அதிகளவிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.