அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை எதிர்க்க போவதில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குடிவரவு குடியகல்வு சட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், இருப்பினும் கல்வி பயில்வதற்கு கட்டணம் வசூலிப்பதை ஏற்றுகொள்ள முடியாது என கூறினார்.
இவ்வாறு கட்டணம் வசூலிப்பது ஏழை மாணவர்கள் கல்வி பெறுவதைத் தடுக்கும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாதுகாப்பு தரப்பினரை விமர்சிப்பதை அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறினார்.
இதேவேளை இயற்கை உரைப் பயன்பாட்டினை கொண்டுவர கடுமையான முயற்சியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.