ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 82ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் மொத்தமாக 82ஆயிரத்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் ஸ்பெயினில் இதுவரை 45இலட்சத்து 88ஆயிரத்து 132பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 21ஆயிரத்து 561பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 75பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஏழு இலட்சத்து 21ஆயிரத்து 582பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரத்து 928பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 37இலட்சத்து 84ஆயிரத்து 544பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.