கிரேக்க தீவான ஈவியாவில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால், குடியிருப்புவாசிகள் கடல் வழியாக பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர்.
2,000க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது வயதானவர்கள் படகுகளில் வெளியேறியுள்ளனர்.
தீயை அணைக்க போதுமான உதவி அனுப்பப்படவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தீவின் பல பகுதிகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டன.
கிரேக்கத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் 45சி (113எஃப்) ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டில் பல காட்டுத் தீ பதிவாகியுள்ளது. ஏதென்ஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட தீ தற்போது தணிந்ததாகக் கூறப்படுகிறது.
மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தால் இது போன்ற வெப்ப அலைகள் அதிகமாகவும் தீவிரமாகவும் மாறி வருகின்றன. அடுத்தடுத்த வெப்பமான, வறண்ட வானிலை காட்டுத்தீயைத் தூண்டும்.
ஏதென்ஸின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பெரிய தீவான ஈவியாவில், இரண்டு தீயணைப்பு முனைகள் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை அழித்துள்ளன.
தீவின் பல கிராமங்களில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.