பால்மா இறக்குமதியின்போது அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரியை முழுமையாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று இடமபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.
உள்ளூர் சந்தையில் தற்போது நிலவும் பால்மா தட்டுப்பாடு குறித்து அமைச்சரவையின் கவனத்திற்கு வந்ததை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து உள்ளூர் சந்தையில் பால்மா விலையை அதிகரிக்காமல், தற்போதுள்ள பால்மா இறக்குமதிக்கான வரி விகிதத்தை திருத்தம் செய்வதன் மூலமோ அல்லது வேறு பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமோ போதியளவு பால்மாவை உள்ளூர் சந்தையில் விநியோகிப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.