கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அவ்வாறு எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் சுகாதாரத் தரப்பினரின் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை என்றும் அவர் கூறினார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தற்போதைய அரசாங்கம் மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என்றும் கூறினார்.
ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சுகாதார நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டார்.