கௌதாரி முனை விநாயகர் கடற் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஏழு பேருக்கு அட்டைப் பண்ணைக்கான அனுமதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு இன்று பூநகரி பகுதியில் அமைந்துள்ள இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வடக்கு மாகாணத்திற்கான பிராந்திய அலுவலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
52 பேர் குறித்த அனுமதியை கோரியிருந்த நிலையில், 7 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை அட்டைப் பண்ணைக்கான பணி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அனுமதி கோரிய 52 பேருமே அட்டைப்பண்னைக்குரிய பணிகளை ஆரம்பிக்க முடியும் என்றும் அனுமதி வழங்கப்படாதவர்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அனுமதி இல்லை என்பதற்காக அட்டைப் பண்ணையினை ஆரம்பிக்காமல் இருக்க வேண்டாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.