கண்டி எசல பெரஹெராவிற்கு போதுமான பாதுகாப்பு வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்டத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ரத்நாயக்க தெரிவித்தார்.
கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு எசலா பெரஹெராவை பொதுமக்களின் பங்கேற்பு இல்லாமல் நடத்த கண்டி எசல பெரஹெரா குழு தீர்மானித்துள்ளது.
மல்வத்த மற்றும் அஸ்கிரிய பிரிவுகளின் மகாநாயக்கர்களின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எசல பெரஹெராவை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வசதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பெரஹெராவிற்கு போதிய பாதுகாப்பு வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்டத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ரத்நாயக்க தெரிவித்தார்.
பெரஹெரா செல்லும் வழியில் பொதுமக்கள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வீதியோர ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளின் உரிமையாளர்கள் பெரஹெராவை பார்க்க பொதுமக்கள் தங்குவதற்கு இடவசதி அளித்து பணம் சம்பாதிக்க தயாராகி வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.