டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று அதி வேகமாக பரவவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகளில் 86 மாதிரிகள் மட்டுமே குறித்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை டெல்டா வைரஸ் மற்ற எல்லா கொரோனா வைரஸுகளையும் விட வேகமாக பரவும் திறன் கொண்டது என நிதி ஆயோக் மருத்துவ உறுப்பினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.