மாநிலங்களவையின் புனிதத் தன்மை அழிந்து விட்டதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (புதன்கிழமை) அவையில் பேசிய அவர், எதிர்கட்சி உறுப்பினர்களின் செயற்பாடு எல்லை மீறிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
சில உறுப்பினர்களின் மேசைகளின் மீது ஏறி நின்று அமளியில் ஈடுபடுவதால், அவையின் புனிதத் தன்மை அழிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பெகாஸஸ் உளவு விவகாரத்தை எழுப்பி எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடைவடிக்கைள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மக்களவை திகதிக் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.