கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் இறக்காமத்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய புதிய நிலப்பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
புதிய நிலம் மூன்று ஏக்கர் பரப்பளவில் உள்ளதாகவும் அதன்படி, அப்பகுதியில் 2 ஆயிரத்து 400 சடலங்களை அடக்கம் செய்ய முடியுமென அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இந்த நிலம் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ஏற்ற இடம் என்று அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளதாகவும் அதற்கு தேவையான பரிந்துரைகளைச் செய்ய தொழில்நுட்ப குழு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓட்டமாவாடியில் இதுவரையில் கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.