மீண்டும் எழுச்சி பெற்ற திக்ராயன் படைகளுக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறு எத்தியோப்பிய அரசாங்கம் தனது நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
வயதான அனைத்து எத்தியோப்பியர்களும் பாதுகாப்புப் படைகள், சிறப்புப் படைகளில் இணைந்துகொள்ள இதுவே சரியான நேரம் என பிரதமர் அபிய அகமது அலுவலகம் அறிவித்துள்ளது.
எட்டு மாத மோதலுக்குப் பின்னர், திக்ராயன் படைகள் பிராந்திய தலைநகரான மெகெல்லேவை மீண்டும் கைப்பற்றினர்.
இதனை அடுத்து தைக்ரேயின் வடக்கு பகுதியில் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை எத்தியோப்பிய அரசாங்கம் அறிவித்த ஆறு வாரங்களுக்குப் பின்னர் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
மூன்று தசாப்தங்களாக எத்தியோப்பியாவை ஆட்சி செய்த தைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டாட்சி துருப்புக்களுக்கும் படையினருக்கும் இடையே நவம்பரில் போர் தொடங்கியது.
இதன் காரணமாக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதுடன் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் அண்டை நாடான சூடானுக்கு தப்பிச் சென்றனர்.