தலிபான் போராளிகள் இன்று புதன்கிழமை வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மற்றொரு நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தலைமையிலான வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்பட்டதிலிருந்து, ஆறு நாட்களில் 8 மாகாண தலைநகரம் போராளிகள் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன்படி புதிதாக வடகிழக்கு மாகாணமான பதக்ஷானின் தலைநகரான பைசாபாத்தை தலிபான் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்களுடனான பல மணிநேர சண்டைக்குப் பின்னர் குறித்த பகுதிகளில் இருந்து படையினர் பின்வாங்கியதாக அம் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் முஜாதிதி தெரிவித்துள்ளார்.
நகரத்தின் இழப்பு, கடந்த சில மாதங்களாக தலிபான் தாக்குதல்களின் வேகத்தை தடுக்க போராடி வரும் அரசுக்கு சமீபத்திய பின்னடைவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் மோதலை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான சர்வதேசத்தின் அழைப்பை, தலிபான்கள் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.