அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவிலான கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 1 .30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 837 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் ஐந்து மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கில் ஆகக் கூடுதலாக அம்பாறை பிராந்திய சுகாதார சேவை பிரிவில் 227 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பில் 342 பேரும் ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 163 பேரும் மூன்று மரணங்களும் கல்முனையில் 105 பேரும் ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மூன்றாவது அலையில் கிழக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலான எண்ணிக்கையாகும்.
மூன்றாவது அலையில் மொத்தமாக 20 ஆயிரத்து 204 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 393 மரணங்களும் பதிவாகியுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.