அல்ஜீரியாவில் காட்டுத் தீ காரணமாக 25 பாதுகாப்பு தரப்பினர் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தலைநகரின் கிழக்கே மலைப்பாங்கான கபிலி பிராந்தியத்தின் பெரும் பகுதி காட்டு தீயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
பல இடங்களில் ஒரே நேரத்தில் சுமார் 50 தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டதற்குப் பின்னால் சதி இருப்பதாக உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் காட்டுத் தீயை கட்டுப்படுத்ததும் போராட்டத்தில் இராணுவ வீரர்கள் தீக்காயங்களுக்குள்ளானதாகவும் பலர் உயிரிழந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த காட்டுத்தீ காரணமாக பல வீடுகள், ஹோட்டல்கள், மாணவர் விடுதிகள் மற்றும் பல்கலைக்கழக கட்டடங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.