நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால் 20 நாட்களுக்குள் குறைந்தது ஆயிரத்து 200 இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சமூக மருத்துவப் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முடிவெடுப்பதில் 5 நாட்கள் தாமதமானலும் அது 700 பேரின் விருப்பமில்லாத மனிதக்கொலை என பதிவிட்டுள்ளார்.
பேராசிரியர் அகம்பொடி கொரோனா அதிகரிப்பு வரைபடங்களை பதிவிட்டு இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
The SLCovid prediction model https://t.co/29JiuOSI1o clearly shows that immediate curfew will prevent at least 1200 additional deaths within the next 20 days. 5 days delay in decision making will be an “Involuntary manslaughter” of at least 700 people. pic.twitter.com/73ekhYv82I
— Prof Suneth Agampodi (@sunethagampodi) August 10, 2021