ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது என கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வியெழுப்பியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி அலட்சியம் மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பு குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே எதிர்வரும் 21 ஆம் திகதியன்று இன, மத, மொழி பேதமின்றி தேவாலயங்கள், வீடுகள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றில் கறுப்பு கொடி ஏந்துமாறு அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
கொரோனா தொற்று சூழல் இல்லையெனில் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தியிருப்போம் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார்.