பிரித்தானியாவில் உள்ள சில பெற்றோர்கள் தங்கள் மருத்துவ ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு, கொவிட் தடுப்பூசி பெற இன்னும் போராடி வருவதாக கூறுகிறார்கள்.
இவர்கள் தடுப்பூசி பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்குப் பிறகும் இந்த நிலைமை நீடிப்பதாக அவர்கள் கவலை கொண்டுள்ளனர்.
ஆபத்தில் உள்ள 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் தடுப்பூசி பெற தகுதியானவர்கள் என கடந்த ஜூலை 19ஆம் திகதி அரசாங்கம் அறிவித்தது.
ஆனால், இங்கிலாந்து பொது சுகாதார சேவை, தடுப்பூசி போடும் பணிகள் ஒகஸ்ட் 23ஆம் திகதி முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளது.
சிறுவர்களின் பெற்றோர் எப்போது தொடர்பு கொள்வார்கள் என்று கேட்க இன்னும் காத்திருக்கிறோம் என்றும், ஒரு அளவுக்குப் பிறகு தங்கள் சிறுவர்கள் குறைந்தபட்ச பாதுகாப்போடு பாடசாலைக்கு திரும்பலாம் என்று கவலைப்படுவதாகவும் கூறுகின்றனர்.