பொதுமக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் தன்மை காணப்படுவதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நோய் அறிகுறிகள் காணப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களே என்றும் எனவே, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமாயின், அனைவரும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.