நாட்டில் நேற்றைய தினம் 3 இலட்சத்து 9 ஆயிரத்து 559 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக 65 ஆயிரத்து 695 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது.
அதேபோல சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 2 இலட்சத்து 17 ஆயிரத்து 712 பேருக்கு செலுத்தப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம், நேற்று 17 ஆயிரத்து 219 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 493 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.
மேலும் 102 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 4 ஆயிரத்து 32 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.
அதேநேரம், 4 ஆயிரத்து 305 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸும் செலுத்தப்பட்டது.
அதேநேரம், ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஒருவருக்கு மட்டும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.