ஹெய்ட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
ஹெய்ட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 304 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, ஹெய்ட்டியில் ஒரு மாதத்திற்கு அவசர காலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த நிலநடுக்கம் குறித்து தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பக்கத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், சோகத்தில் உள்ள ஹெய்ட்டி மக்களுடன் இலங்கை ஒன்றாக பயணிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
The #GoSL and all #SriLankans join those who are praying for the people of #Haiti in the wake of the devastating earthquake. Our thoughts and prayers are with the families of those who have lost their loved ones and are still missing members of their families by this devastation.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) August 15, 2021