எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு முதல் வீடுகளில் அல்லது திருமண மண்டபங்களில் மறு அறிவித்தல் வரை திருமணத்தை நடத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது.
கொரோனா தொற்று பரவுவலைக் கட்டுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும் நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அதேநேரம் உணவகங்களில் ஒரே நேரத்தில் 50 வீதத்திற்கும் குறைந்த எண்ணிக்கையிலாவர்களே கலந்து கொள்ள முடியும் என்றும் இராணுவ தளபதி குறிப்பிட்டார்.
முடிந்தவரை பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.















