ஆசிரியர் – அதிபர்கள் சங்கங்களுக்கும் அமைச்சரவை உப குழுவுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பள முரண்பாடு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழு ஆசிரியர் – அதிபர்கள் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி அந்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியளவில் அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, குறித்த சந்திப்பு நாளை வரை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி அதிபர் – ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் 37ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.