பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 28ஆயிரத்து 438பேர் பாதிக்கப்பட்டதோடு 26பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 62இலட்சத்து 95ஆயிரத்து 613பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 30ஆயிரத்து 979பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து ஏழாயிரத்து 793பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 882பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 48இலட்சத்து 56ஆயிரத்து 841பேர் பூரண குணமடைந்துள்ளனர்.