கடும் விமர்சனங்களுக்கு மத்தியில், மலேசிய பிரதமர் முகைதீன் யாசின், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்ள அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்ட நிலையில், அவர் நேற்று (திங்கட்கிழமை) பதவி துறந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறிய பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்று முகைதீன் யாசின், பிரதமரானார்.
இந்தநிலையில் ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கும் ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பு கட்சி ஆதரவை மீளப்பெற்றுள்ள நிலையில் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
எனினும், செப்டம்பரில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதாக முகைதீன் யாசின் கூறினார்.
இருப்பினும் கடந்த வெள்ளிக்கிழமை, தனக்கு பெரும்பான்மை இல்லை என முகைதீன் யாசின், ஒப்புக்கொண்டார்.
இதற்கு ஏற்ற வகையில் மலேசிய பிரதமர் முகைதீன் யாசின், தனது பதவியை இராஜினாமா செய்தார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை மன்னர் சுல்தான் அப்துலாவிடம் கையளித்தார்.
18 மாதங்களே பதவியில் நீடித்த முகைதீன் யாசின், கொரோனா தொற்றை சரியான முறையில் கையாளவில்லை என கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.