வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இரண்டு பெண்கள் உட்பட மூவர் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளனர்.
குறித்த மூவரும், சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.
அதன்பின்னர் அவர்களை, வைத்தியசாலையின் கொரோனா விடுதிக்கு மாற்றி வைத்தியர்கள் சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த மூவரும் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பெண்களில் ஒருவர், சுந்தரபுரம் பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த முதியவரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது