உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலின்படி எமது நாடு கொரோனா வைரஸின் நான்காம் கட்டத்தை அடைந்துள்ளதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் உமாசுதன் தெரிவித்தார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இலங்கையானது கொரோனாத் தொற்றுக்கு முகம் கொடுத்து வருகின்றது.
அன்றிலிருந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மக்களுக்கான அறிவுறுத்தல்களையும் விழிப்புணர்வுகளையும் காலத்திற்கு காலம் வழங்கி வருகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலின்படி எமது நாடு கொரோனா வைரஸின் நான்காம் கட்டத்தை அடைந்துள்ளது.
இதிலிருந்து மீண்டுவர சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும்” ன அவர் மேலும் தெரிவித்தார்.






