தலிபான்களின் எழுச்சி எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை அதிகரிக்கக் கூடும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ‘ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட அனைத்து உலகத் தலைவர்களும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தற்போது நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், அச்சம், கவலை, உள்ளிட்ட உணர்வுகள் அந்த நாட்டை ஆட்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தலிபான்களின் எழுச்சி எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடும் எனவும் இந்தியா பயங்கரவாத நடவடிக்கைகளை ஒருபோதும் சலித்துக்கொள்ளாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.