ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், இதுவரை கட்டாரில் முகாமிட்டிருந்த தலிபான்களின் முக்கிய தலைவர்கள் ஆப்கானிஸ்தான் திரும்பி இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கந்தஹார் விமான நிலையத்தில் தலிபான்களின் நிறுவனவர்களில் ஒருவரான முல்லா அப்துல் கானி பராதர் வந்திறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலிபான்களின் புதிய நகரமாகக் கருதப்படும் கந்தஹார் அவர்களது முக்கிய இராணுவத் தளமாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.