கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹெய்டியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது.
கடந்த சனிக்கிழமை தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ்சில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் 7 புள்ளி 2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் 60 ஆயிரம் வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில், 76 ஆயிரம் கட்டடங்கள் சேதமடைந்தன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ஆயிரத்து 941 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் 9 ஆயிரத்து 900 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.