இலங்கையில் ஒரே நாளில் 1 இலட்சத்து 64 ஆயிரத்து 308 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதன்படி சைனோபாம் இரண்டாம் தடுப்பூசி 95 ஆயிரத்து 533 பேருக்கும் முதலாம் தடுப்பூசி 27 ஆயிரத்து 888 பேருக்கும் நேற்று செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய நாட்டில் சைனோபாம் முதலாம் தடுப்பூசியினை 95 இலட்சத்து 21ஆயிரத்து 900 பேரும் அதன் இரண்டாம் தடுப்பூசியினை 41 இலட்சத்து 67 ஆயிரத்து 616 பேரும் இதுவரை செலுத்திக்கொண்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம், 7ஆயிரத்து 155 பேருக்கு அஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் முதலாம் தடுப்பூசியும் 665 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.
இதன்படி அஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் முதலாம் தடுப்பூசியினை 13 இலட்சத்து 14 ஆயிரத்து 937 பேரும் அதன் இரண்டாம் தடுப்பூசியினை 8 இலட்சத்து 74 ஆயிரத்து 236 பேரும் இதுவரை செலுத்திக்கொண்டுள்ளனர்.
அதேபோன்று பைஸர் முதலாம் தடுப்பூசி 64 பேருக்கும் இரண்டாம் தடுப்பூசி 613 பேருக்கும் நேற்று செலுத்தப்பட்டுள்ளன.
மேலும் மொடர்னா முதலாம் தடுப்பூசி 5 ஆயிரத்து 070 பேருக்கும் அதன் இரண்டாம் தடுப்பூசி 27 ஆயிரத்து 320 பேருக்கும் நேற்று செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.