பாமியன் புத்தர் சிலையை அழித்த தலிபான்களின் ஆட்சியை ஒருபோதும் ஏற்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தலிபான்களின் ஆட்சி குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனவே காபூலிலுள்ள இலங்கை தூதரகத்தை அங்கிருந்து உடனடியாக நீக்க வேண்டும். மத்திய ஆசியாவிற்கான இலங்கையின் தூதகரத்தை மற்றுமொரு நாட்டில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்பானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளமையானது ஜிஹாத் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களின் தளமாக ஆப்கான் மாறலாம் என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆகவே இதனை நினைவில் வைத்து செயற்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
மேலும், நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து அரசாங்கம் தலிபான்களை ஆட்சியை ஏற்காது செயற்பட வேண்டும். மீண்டும் தலிபான்களின் ஆட்சி ஊடாக ஏற்பட கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து கவனத்தில் கொண்டு தீர்மானங்களை அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இல்லாவிடின், மாறாக பாமியன் புத்தர் சிலையை அழித்த தலிபான்களை அனுமதித்தால், பிராந்தியத்தில் இல்லாமலாக்கப்பட்ட பயங்கரவாதம் மீண்டும் ஏற்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.