தற்போதுள்ள சூழலில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தவேண்டிய தேவை இல்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், மூன்றாவது டோஸ் செலுத்துவதற்கான தேவை நிச்சயம் வரும் எனவும் கூறியுள்ளார்.
மூன்றாவது டோஸ் பூஸ்டர் டோஸாக எந்த தடுப்பூசியை போடலாம்? தடுப்பூசிகளை கலந்து போடலாமா அல்லது புதிதாக ஒரு தடுப்பூசி செலுத்தலாமா போன்ற முடிவுகள் தேவை எழும்போதுதான் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்துவதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.