ஆப்கானிஸ்தானிற்கு முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயார் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.
மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் உட்பட பல சர்வதேச தொண்டு நிறுவனங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை பல தசாப்தங்களாக ஆப்கானிஸ்தான் மக்களுக்காகவும் அவர்களுக்காகவும் பணியாற்றி வருகிறது என அன்டோனியோ குட்ரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள் அங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் மிகவும் கஷ்டப்பட்ட ஆப்கான் மக்களுக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.