இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கையெறிக் குண்டுகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
நாக்பூரில் உள்ள எகனாமிக் எக்ஸ்புளோசிவ்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த கையெறிக்குண்டுகளை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், இந்தியாவில் முதன்முதலாக தனியார் நிறுவனம் வெடிகுண்டுகளை இராணுவத்திற்காக தயாரித்துள்ளதாக கூறினார்.
இதுவரை இந்த நிறுவனம் ஒரு இலட்சம் கையெறிக்குண்டுகளை இராணுவத்திற்கு வழங்கி உள்ளதாக தெரிவித்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இராணுவம் மற்றும் விமானப்படைக்கு 10 இலட்சம் கையெறிக் குண்டுகளை வழங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.