ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரும் இந்தியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் விசா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்சின் எதிஹட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த 14 நாட்களாக இந்தியாவில் தங்கியிருந்த பின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வருவோருக்கு வழக்கமாக விமான நிலையத்தில் வழங்கப்படும் விசா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை, வங்கதேசம். நேபாளம், பாகிஸ்தான், ஆப்கான், நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, உகாண்டா, நமிபியா ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கும் தற்காலிகமாக விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் வசிக்கும் உரிமை உள்ள இந்தியர்களுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்திறங்கியதும் விசா வழங்கப்படும். இது 14 நாட்களுக்கு செல்லுப்படியாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.