கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜரானார்.
கரூரில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாக, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தமிழக வெற்றிகளகத்தினர் புகார் அளித்தனர்.
இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு,டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து, செந்தில் பாலாஜிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
அதனை ஏற்று, இன்று ( 17) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜரானார்.
அதிகாரிகளின் கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே இந்த வழக்கில் 3 முறை நேரில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












