முல்லைத்தீவு கோட்டையை வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 218ஆம் ஆண்டு வெற்றி நாளான நேற்று பண்டாரவன்னியனுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டது.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
கொரோனா பரவல் காரணமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலைமையால் வருடந்தோறும் பண்டாரவன்னியன் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்படும் முல்லைத்தீவு நகர்ப்பகுதிக்கு செல்ல முடியாத நிலையில் ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் பண்டாரவன்னியனின் திருவுருவ படத்துக்கு சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுரைப்பற்று பிரதேசசபையின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஆங்கிலேயரின் கோட்டையை 1803ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி போரிட்டு மாவீரன் பண்டாரவன்னியன் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.