நூற்றுக்கணக்கான போகோ ஹராம் போராளிகள் தெற்கு நைஜரில் உள்ள இராணுவ நிலைகளை தாக்கியத்தில், 16 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு 9 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மேற்கு ஆபிரிக்க நாட்டின் டிஃபா பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதலில் குழுவில் இருந்து சுமார் 50பேர் கொல்லப்பட்டதாகவும் கணிசமான அளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போகோ ஹராம் குழு 2009இல் வடகிழக்கு நைஜீரியாவில் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கியது. அண்டை நாடுகளான சாட்; மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளிலும் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றது.
நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) பிற்பகுதியில் போகோ ஹராம் குழு பரோவா நகரத்தை குறிவைத்தது.
அங்கு ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் 2015 இல் கிளர்ச்சியாளர்கள் படுகொலைகளைத் தொடர்ந்து வேறு இடங்களில் தஞ்சம் அடைந்த பிறகு திரும்பினர்.
ஜூன் மாத இறுதியில் 6,000க்கும் மேற்பட்ட மக்கள் பரூவாவுக்கு திரும்பினர். இந்த பிராந்தியத்தில் சுமார் 26,000 மக்கள் பாதுகாப்பான கிராமங்கள் அல்லது ஐ.நா. கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
திரும்பி வருபவர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்க அவர்கள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, டிஃபா பகுதியில் சுமார் 300,000 நைஜீரிய அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நைஜீரியர்கள் உள்ளனர்.