நாட்டில் இதுவரை ஒரு கோடியே 22 இலட்சத்து 20 ஆயிரத்து 331 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேபோல், 55 இலட்சத்து 17 ஆயிரத்து 540 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 24 ஆயிரத்து 194 பேருக்கு சீனோபோர்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 254,794 பேருக்கு இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு கூறியுள்ளது.
இதேவேளை, இதுவரை 881,738 பேருக்கு கொவ்சீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மற்றும் 159,088 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதலாவது டோஸும் 23,797 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை 305,639 பேருக்கு பைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், 150,001 பேருக்கு பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், 771,449 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில் மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 543,959 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.