சென்னையிலுள்ள 112 கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நேரடியாகவே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம், எதிர்வரும் செப்டம்பர் முதல் நாளில் ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் கல்லூரிகள் ஆரம்பமாகவுள்ள உள்ள நிலையில், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமையை, சென்னை நந்தனம் அரச ஆடவர் கலைக் கல்லூரியில் அமைச்சர்களான பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் பின்னரே மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும்.
மேலும், விடுதிகள் திறக்கப்படாததால், மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்லூரிகளுக்கு வந்து செல்ல வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.