அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று (02) அதிகாலை 3.30 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
காம்பெல் விரிகுடாவிலிருந்து வடகிழக்கே சுமார் 256 கிலோ மீட்டர் தொலைவில் இதன் மையப்பகுதி அமைந்திருந்தது.
இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சேதம் அல்லது உயிர் இழப்பு குறித்த இதுவரை தகவல்கள் எதுவும் இல்லை.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் நில அதிர்வு வரைபடத்தில் அதிக ஆபத்துள்ள வகையான நில அதிர்வு மண்டலம் V இல் அமைந்துள்ளன.
இதனால் இப்பகுதி அடிக்கடி நில அதிர்வு நடவடிக்கைகளுக்கு ஆளாகிறது.
கடந்த காலங்களில் பல பெரிய நிலநடுக்கங்கள் இங்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














