இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கக் கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அக்கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க இவ்வாறு தெரிவித்தார்.
தனித்துவமான முடக்க கட்டுப்பாடுகளுடன் நாடு மூடப்பட்டாலும் பொருளாதார ரீதியாக முக்கியமான பல துறைகள் தொடர்ந்து செயற்பட முடிந்துள்ளது என கூறினார்.
இதேவேளை அவுஸ்ரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் முடக்கத்தை அமுல்படுத்தினாலும், அவர்களால் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க முடியவில்லை என்றும் நிபுண ரணவக்க சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரம் சரிவடையாமல், நாடு முன்னேற வேண்டும் என குறிப்பிட்ட அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.