அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தல் மற்றும் மறைப்பதைத் தடுக்க ஜனாதிபதி வெளியிட்ட அவசரகால விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கான விசேட விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற விவாதம் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் முதலில் கேள்வி நேரத்திற்கு திட்டமிடப்பட்ட போதிலும், அவசரகால விதிமுறைகள் மீதான விவாதத்திற்காக அவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் நாடாளுமன்றத்தை உள்ளடக்கிய ஊடகவியளாளர்களுக்கும் இன்று அன்டிஜென் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
இதேவேளை நாடாளுமன்றத்தில் அவசரகால விதிமுறைகளுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.