திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 45 ஆயிரம் தொன் நெல் மூடைகளை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால் இன்று (செவ்வாய்க்கிழமை) கந்தளாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மூன்று நெல் களஞ்சியசாலைகளில் 45 ஆயிரம் தொன் நெல்மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று நெல் களஞ்சியசாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் கே.டி வசந்தன் தெரிவித்தார்.
சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பொலிஸாரும் ஈடுபட்டதோடு, பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.