பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து இரண்டாவது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகளான சூர்யகாந்த், அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது மத்திய அரசு சார்பில் முன்னிலையான ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரம் குறித்த 2 ஆவது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். ஆகவே வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட சுமார் 300 பேரின் செல்லிடப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.